Sunday, 5 March 2017

நீண்ட நேரம் நாற்காலியில் உட்காருபவரா நீங்கள்? இது உங்களுக்கான பதிவு


நாம் வீற்றிருக்கும் நாற்காலியே நமக்கு உடல் நலக்குறைவு ஏற்படுத்தும் என்பது நமக்குத் தெரியுமா?

காலை சூரிய உதயத்திற்கு பின் அவசரம் அவசரமாக அலுவலகங்களில் நுழைந்து தன் இருக்கையில் உட்கார்ந்தால் போதும் வேலைப்பளுவில் நேரம் போகுவதே தெரியாது.
மன அழுத்தம், உடல்வலி, முடி உதிர்வு இன்னும் பல இன்னல்கள் நாளுக்கு நாள் ஏற்படுகின்றன.

நாம்  ஒரே இடத்தில் அதிக நேரம் அமரும்பொழுது நம் உடலின் சூடானது வெளியே செல்ல இயலாமல் நம் முதுகுத்தண்டின் கீழ்ப்புறத்தில் நிலைகொண்டு இருக்கும். இந்த உடல் வெப்பமே நாளடைவில் மூலக்கட்டியாக மாறும் வாய்ப்புண்டு.


அதிக நேரம் இருக்கையில் அமர்வதால் ஏற்படும் உடல் நலத்தீங்குகள் 

1. சீரான இரத்த ஓட்டம் தடைபெறும்.
2. நுரையீரல் செயல்பாடு குறைவு
3. உடல் பருமன்
4. தோள்பட்டை, கை கால் மற்றும் முதுகு வலி


நீங்கள் என்றாவது பேருந்து ஓட்டுநர் இருக்கையை கவனித்துள்ளீரா? 

ஓட்டுநரின் இருக்கை அடிப்புறத்தில் சிறு துவாரங்கள் இருக்கும். அத்துவாரம் வழியே உடலின் வெப்பம் அவ்வப்பொழுது வெளியேறிவிடும். 

அப்படி இருந்தும் ஓட்டுநர் இருக்கையின் மேல் ஒரு சிறிய துண்டினை விரித்து அமருவார் . அவருக்கு அச்சிறிய துண்டின் அருமை தெரியும்.





ஆனால் நம் இருக்கை அப்படியா உள்ளது. சொகுசு நாற்காலி இல்லையென்றால் அலுவலகம் செல்லக்கூட விரும்பமாட்டோம் என்ற நிலை.


அதற்காக நாம் உட்காராமல் இருக்கவும் முடியாது. இந்த உடல் வெப்பத்தை குறைக்க இயற்கை அளித்த வரம் பருத்தி.

பருத்தியினால் நெய்த துண்டினை நாற்காலியின் மேல் விரித்து அதன்மீது உட்காரும்போது நம் உடல் வெப்பத்தை பருத்தி உறிஞ்சிக்கொண்டு அவ்வெப்பத்தை ஆவியாக்கி வெளியேற்றிவிடும்.

பருத்தி விரிப்பு உடல் வியர்வையின் மூலம் உண்டாகும் உடல் ஈரத்தை கட்டுப்படுத்துகிறது.

அதுமட்டுமல்லாது சீரான காற்று உடலில் பரவவும் வழிவகைச் செய்கிறது.


நெடுதூரம் செல்லும் வாகன ஓட்டிகளும் கூச்சம் பார்க்காமல் பருத்தி விரிப்பின்மேல் அமர்ந்து செல்வது நல்லது.



நாம் வாழும் வாழ்க்கை முறை சீராக இருந்தாலே நோய்கள் நம்மை அண்டாது. 

அரைமணி நேரத்திற்கு ஒருமுறை இருக்கையை விட்டு எழுந்து சிறிது தூரம் நடத்தல்.
சீரான உணவு முறை மற்றும் தண்ணீர் பருகுதல்.
சரியான நேரத்தில் துயில் கொள்ளுதல். 
உடற்பயிற்சி செய்தல். 
வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல். 

இவ்வாறு உங்கள் நலன் அறிந்து வளமுடன் வாழுங்கள்.