அன்று ஒருநாள் வழக்கம் போல் இரயில் பயணம் என் கட்டை விரலும் சிட்டுக்குருவி சவப்பெட்டி (கைப்பேசி) மீட்ட கண்களோ இமைக்காமல் செய்தியை படித்துக்கொண்டிருந்தது.
சகப்பயணி ஒருவர் என்னை பார்த்து எப்படி இவ்வளவு சிறிய எழுத்துக்களை படிக்கிறிங்க வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பிங்களா என்று கேட்டார். நான் எப்பொழுதோ ஒருமுறை என சொல்லி வழித்தடத்தில் இறங்கி விட்டேன்.
அதன்பின் வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளித்தால் என்ன பயன்கள் என தேடல்களில் "சனி நீராடு" என அவ்வையின் ஆத்திச்சூடி வரிகள் என் கவனத்தை ஈர்த்தது.
வாரத்தில் ஒருநாள் அதுவும் சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து நீராடு என்பதே இப்பாடலின் பொருள்.
நல்லெண்ணெய் உடல் முழுவதும் தேய்த்து அரை மணிநேரம் கழித்து வெதுவான வெந்நீரில் குளிக்கும்பொழுது
1. கண்களின் எரிச்சல் நீங்கி கண் பார்வை கூர்மை பெறும்.
பெண்கள் எண்ணெய் குளியலுக்கு உகந்த நாள் வெள்ளிக்கிழமை ஆண்களுக்கு சனிக்கிழமை. சிலர் நல்லெண்ணையுடன் சுக்கு பூண்டு மிளகு சேர்த்து சூடேற்றி பின்பு சூடு ஆரியதும் பயன்படுத்துவர்.
1. கண்களின் எரிச்சல் நீங்கி கண் பார்வை கூர்மை பெறும்.
2. வெயில் காலங்களில் உடலின் வெப்பத்தை நீக்கி குளிர்ச்சியை தரும்.
3. முடி உதிர்வை கட்டுப்படுத்தும்.
4. தேகத்தின் பொலிவை மெருகூட்டி இளமை தோற்றத்தை உறுதிப்படுத்தும்.
பெண்கள் எண்ணெய் குளியலுக்கு உகந்த நாள் வெள்ளிக்கிழமை ஆண்களுக்கு சனிக்கிழமை. சிலர் நல்லெண்ணையுடன் சுக்கு பூண்டு மிளகு சேர்த்து சூடேற்றி பின்பு சூடு ஆரியதும் பயன்படுத்துவர்.
எண்ணெய் குளியல் நாட்களில் செய்யக்கூடாதவை:
1. எண்ணெய் குளியலுக்கு பின் அந்நாளின் பகல் நேரங்களில் கண்டிப்பாக தூங்க கூடாது.
2. சூரிய உதயத்திற்கு பின் காலை 7 - 8 மணிக்குள் எண்ணெய் குளியல் செய்துவிட வேண்டும். அதற்கு பிறகு செய்தல் நல்ல பயனளிக்காது.
3. குளியல் ஆரம்பம் முதலே தலையில் தண்ணீர் ஊற்றாமல் முதலில் கால்கள் கைகள் முகத்தை வெந்நெரில் கழுவி விட்டு பிறகு தலைக்கு தண்ணீர் ஊற்றினால் உடல் வெப்பம் காதுகள் மற்றும் கண்கள் வழியாக வெளியேறி குளிர்ச்சி தரும்.
உடல் வெப்பத்தை தணித்தாலே பல நோய்கள் நம்மை அணுகாது.