தான் ஒரு விஞ்ஞானி என்பதை தனக்கு தெரியாமல் வாழ்ந்து வந்தவர்கள் நம் முன்னோர்களே. வேளாண்மையின் தொழில்நுட்பம், வானிலை அறிக்கை, மண்ணியல் இப்படி பல விந்தைகளை ஆய்வுகூடம் இல்லாமல் கற்ற நம் முன்னோர்கள் விஞ்ஞானிகளே.
அளவில் சிரியது ஆனால் அள்ளித்தரும் பயன்களோ எண்ணில் அடங்காதவை. ஆம், மற்ற தானியங்களைக் காட்டிலும் கம்பில் அதிகளவு வைட்டமின்கள் உள்ளன. கம்பு உடலுக்கு குளிர்ச்சி தரும் ஆகவே தான் வெயில் காலங்களில் கம்புக்கூழ் முன்னோர்களால் காலை உணவாக உட்கொள்ளப்பட்டது.
கம்பின் தனிச்சிறப்பு வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும். சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
தோலிற்கும், கண்பார்வைக்கும் அவசியமான வைட்டமின் யு உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் அதிக அளவில் கம்பில் மட்டுமே உள்ளது. அரிசியை விட கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச் சத்து கம்பு தானியத்தில் உள்ளது.
புரதம், கால்சியம், பாஸ்பரம், இரும்புச் சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள் , மாவுச்சத்து, பி 11 வைட்டமின், கரோட்டின், லைசின் போன்ற அமிலங்கள் என எண்ணற்ற உடல் ஆரோக்கிய காரணிகள் கம்புப்பயிரில் உள்ளன.
இரவு நேர வேலையில் இருப்பவர்கள், நீண்ட நேரம் ஒரே இடத்தில அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் காலை, மதிய வேளைகளில் கம்பை உணவாக உட்கொண்டு வந்தால் உடல் வலுவடையும். வயிற்றுப்புண் மற்றும் குடல் புண்களை ஆற்றும். இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதால் இரத்த ஓட்டம் சீராக நடைபெறும்.
குழந்தைகள் வளர்சிதை மாற்றத்திற்கு தேவையான சத்துக்கள் கம்பில் அதிகம். முடி வளர்ச்சிக்கும் முக்கிய பங்கி வகிக்கன்றது.
இந்தியாவில் அதிகமாகப் பயிரிடப்படும் சிறு தானியங்களில் கம்பு முதலிடம் என்னும் கூற்றே இதன் முக்கியத்துவத்தின் சான்று.

No comments:
Post a Comment