ஆடி மாதத்தில் தான், சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணத்தை துவங்குகிறது. ஆடியில் சூரியனிடம் இருந்து வெளிப்படும் கதிர்கள், விவசாயத்திற்கு உகந்ததாகும். பகல் பொழுது குறைந்தும், இரவு நீண்டும் இருக்கும். காற்றும், மழையும், ஈரப் பசையும் அதிகமாக காணப்படும்.
இந்த மாதத்தில் சூரியனும், சந்திரனும் ஒரே நேர்க் கோட்டில் வருகின்றன. சந்திரனின் குளிர்ச்சி சூரியனை குளிர்விக்கிறது; வெய்யில் தாக்கம் குறைகிறது. சூரியனை விட, சந்திரனுக்கே ஆதிக்க நிலை வந்து விடுவதால், நம்மை குளிர்விக்கிறது.
காற்றில் விதைகள் பரவுவது போல, நோய் கிருமிகளும் அதிகமாய் உற்பத்தியாகி பரவும். அதனாலேயே சளி, இருமல் அதிகமாய் தொற்றும்.
மருத்துவமனைகளில் இந்த மாதம் சிகிச்சைக்கு போவோர் எண்ணிக்கை அதிகமாய் இருக்கும்.
சூரிய கதிர்களின் திசை மாற்றத்தினால் உடல் சூடு அதிகரித்து, பெருகி வரும் வைரஸ் கிருமிகள் அம்மை நோயை உருவாக்குகிறது. காற்று மிக வேகமாய் இருப்பதனால், அம்மைக்கு காரணமான வைரஸ் கிருமிகள் எளிதாகவே பரவி, ஒரு உயிர் கொல்லி நோயாக இருந்து வருகிறது.

ஆடிப்பட்டம் தேடி விதை :
ஆடி மாதத்தில் விதை விதைத்தால், அமோகமான விளைச்சல் இருக்கும் என்பதும், நம் நம்பிக்கை. தென் மேற்குப் பருவ மழைக்காலத்தில், தமிழக ஆறுகளில் நீர் வரத்து அதிகமாய் இருக்கும். இப்போது விதைத்தால் தை மாதம் அறுவடை செய்யலாம்.
புதுமண தம்பதியை பிரிப்பதன் கரணம், ஆடியில் இணைந்த தம்பதியருக்கு மருத்துவக் கணக்குபடி சித்திரையில் பிரசவம் ஆகும். கடுமையான வெயில் காலம் என்பதால் தாய்க்கும், சேய்க்கும் பல நோய்கள் வர வாய்ப்பு ஏற்பட்டு விடும்.
இத்தகைய இன்னல்களை நீக்க முன்னோர்கள் பின்பற்றிய அறிவியலே கேழ்வரகு கூழ்.
![]() |
நன்றி : Kaushi's Kitchen |
கூழ் குடிப்பதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. சக்தியை தரக்கூடிய ஈஸ்ட் நுண்ணுயிர், கூழில் அதிகம். கூடவே கொடுக்கப்படும் முருங்கைக் கீரையும் சேர்ந்து, நமக்கு இரும்புச் சத்து, கால்சியம், நார்ச்சத்து போன்றவற்றை தாராளமாகவே தருகிறது.
நம்மில் பலருக்கு கூழ் என்றாலே பிடிக்காது. அதனால், கண்டுபிடித்தஒரு சடங்கு, வழக்கம் தான் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது. அதில் கட்டும் வேப்பிலையும், மஞ்சளும் கிருமிநாசினியாக செயல்படும்.
ஆடி மாதம் நெருங்கி வருவதால், இத்தகைய சிறப்பான மருத்துவ குணங்கள் நிறைந்த கேழ்வரகு கூழை வீட்டிலோ அல்லது கோவில்களிலோ கூச்சம் பார்க்காமல் வாங்கி பருகுங்கள்.
நன்றி : tamilinformationcenter
No comments:
Post a Comment