பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான்.
கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையை போக்குகிறது மற்றும் தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.
சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது.
![]() |
Pic courtesy : sunsamayal.com |
வசம்பின் மருத்துவ குணம்
வசம்பை நல்ல நீரில் ஊறவைத்துத் துவையலாக அரைத்துத் தேனில் கலந்து தினம் 3 வேளை 5 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் குழந்தை, பெரியவர்கள் எல்லோருக்கும் வயிற்றுவலி எட்டிப்பார்க்காது.
வசம்பைத் தூளாக்கி தேனில் குழைத்து நாக்கில் தடவி மென்ற வர ஆரம்பநிலை திக்குவாய் குணமாகும்.
வசம்பு, புதினா இலை, சின்ன வெங்காயம், மிளகுஈ சீரகம் இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து, பனங்கற்கண்டு சேர்தது குடித்துவர சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும்.
சிறிது வசம்புடன் சிறிது சீரகம் சேர்த்து மென்று தின்று மோர் குடித்தால், வாய்வுத் தொல்லை நீங்கும்.
செவ்வாழைப் பழத்துடன் சிறிது வசம்புத்தூளைச் சேர்த்து சாப்பிட்டுவர மாதவிடாய்க் கோளாறுகள் ஒழுங்குபடும்.
சிறுநீர்ப் பையில் கற்களைக் கரைக்கும் தன்மை வசம்பிற்கு உண்டு.
வசம்பு காய்ச்சலைக் குறைக்கும்; குடல் வாயுவைக் கலைக்கும்; வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும்; ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும்.
வசம்பு காரச்சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டது. உடல் வெப்பத்தை அதிகரிக்கும்; பசியுண்டாக்கும்; வயிற்று உப்புசம், வயிற்றுப் பொருமல், வயிறு கனமான உணர்வு போன்றவற்றுக்கு மருந்தாகும்.
வசம்பை விளக்குத் தீயில் சுட்டு, தாய்ப்பாலில் 3 முறை உரைத்து தொப்புளைச் சுற்றி தடவலாம் அல்லது வசம்பைச் சுட்டு கரியாக்கி 100 மி.கி. அளவு, 1 பாலாடை அளவு தாய்ப்பாலில் கலக்கி உள்ளுக்குள் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு குணமாகும்.
கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.
வசம்பினில் சிறிய நச்சுத்தன்மை வாய்ந்த பொருள் உள்ளதால் சிறிது நெருப்பில் சூடேற்றி உபயோகிக்கவும். நெருப்பில் நச்சு மறைந்து விடும்.
எச்சரிக்கை: வசம்பை அதிக அளவில் நீண்ட காலத்திற்கு உட்கொண்டால் கடுமையான வாந்தியையும், வயிற்றுக்குமட்டலையும் தூண்டும். சித்த மருத்துவரின் ஆலோசனைபடி உட்கொள்ளவும்.
No comments:
Post a Comment