அதிமதுரம் ஆயுர்வேதத்தில் முக்கியமான மருந்தாக கருதப்படுகிறது. தவிர மேலும் பல மருத்துவ குணங்கள் கொண்டது.
![]() |
Pic Courtesy: sidhhaherbs.blogspot.in |
இது பித்தம், வாதம், வாந்தி, நாவறட்சி போக்க வல்லது. இலைகள் இனிப்புச் சுவையும் வெப்பத்தன்மையும் கொண்டவை. வேர்கள் இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை.
அதிமதுரத்தின் பயன்கள்:
1. அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.
2. தோல் நோய்கள், கண்நோய்கள், சளி, சரும அலர்ஜி குணமாகும்.
3. அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும். கண் ஒளி பெறும்.
4. அதிமதுரத் துண்டு ஒன்றை வாயிலிட்டுச் சுவைத்து விழுங்க இருமல் தணியும்.
5. அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்... தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.
6. பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.
7. அதிமதுர வேருடன் வால்மிளகு, பனங்கற்கண்டு, பால் சேர்த்து குடிப்பதால் தொண்டைப்புண் குணமாகும்.
8. அதிமதுர கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளித்தாலே வாய்ப்புண்கள் ஆறும்.
9. நாட்பட்ட மூட்டுவலிக்கு இரவு முழுவதும் ஊற வைத்து செய்த அதிமதுர கஷாயம் குடிப்பது நிவாரணமளிக்கும்.
10. காலாணிகள் - அதிமதுரப் பொடியை கடுகெண்ணை (அ) நல்லெண்ணெயில் குழைத்து காலாணிகள் மேல் போட்டால், அவை உதிரும்.
11. அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும்.
12. ஆஸ்துமாவை குணப்படுத்தும் ஆற்றல் அதிமதுரத்திற்கு உண்டு.
இம்மூலிகையை ஆறு வாரத்திற்கு மேல் தொடர்ந்து உபயோகிக்க கூடாது. ஏனெனில் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். கருவுற்ற பெண்கள் தவிர்ப்பது நல்லது.
இயற்கை குணங்கள் கொண்ட அதிமதுரம் பயன்படுத்தி வாழ்வில் வளம் பெறுங்கள்.
No comments:
Post a Comment